ஏப்ரல் 11ல் வடிவேலு படம் ரிலீஸ்!
யுவராஜ் இயக்கத்தில் வடிவேலு நடித்த ‘ஜகஜ்ஜால புஜபல தெனாலிராமன்’ படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் முடிந்து விட்டன.
இந்தப் படத்தின் ஒரு பாடல் காட்சியையும், க்ளைமாக்ஸ் காட்சியையும் சீனாவில் படமெடுத்துள்ளார்களாம்.

டி.இமானின் இசையில் படத்தில் ஐந்து பாடல்கள் உள்ளன. இந்தப் படத்தில் வடிவேலுக்கு ஜோடியாக மீனாட்சி சேஷாத்திரி என்ற புதுமுகத்தை அறிமுகம் செய்துள்ளனர்.
தம்பி இராமையா இந்தப் படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார் . ஏ.ஜி.எஸ் என்டெர்டெயின்மெட் தயாரிக்கும் தெனாலிராமன் படத்தின் இசை வெளியீட்டு விழா ஏப்ரல் 1ல் நடக்க உள்ளது.
'கோச்சடையான்' மே மாதம் ரிலீஸ் ஆவதால். ஏப்ரல் 11ல் 'ஜகஜ்ஜால புஜபல தெனாலிராமன்' படம் ரிலீஸ் ஆகிறது.
இதே நாளில் விஷால் நடித்த 'நான் சிகப்பு மனிதன்' படமும் ரிலீஸ் ஆகிறது.
No comments:
Post a Comment