ராஜுமுருகன் இயக்கத்தில் அட்டகத்தி தினேஷ் நடித்த குக்கூ கடந்த வாரம் வெளியானது. பார்வையற்றவர்களின் வாழ்வியலைச் சொன்ன குக்கூ படத்துக்கு ரசிகர்களிடம் செம ரெஸ்பான்ஸ்.
படம் பார்த்த அனைவருமே சிறந்த படம் என்று பாராட்டத்தவறவில்லை. அதேநேரம் திரையுலகில் வேறு மாதிரியான தகவல்கள் அடிபட்டன.
அதாவது குக்கூ படத்துக்கு நல்ல ரிசல்ட் கிடைத்தாலும் எதிர்பார்த்த அளவுக்கு வசூல் இல்லை என்பதே அந்தத் தகவல்.
இந்நிலையில் குக்கூ படத்தின் படக்குழுவினர் மீடியாக்களை அழைத்து சக்ஸஸ்மீட் நடத்தினார்கள். அப்போது பேசிய படத்தின் தயாரிப்பாளரான ஆடிட்டர் சண்முகம், குக்கூ படம் மிகப்பெரிய வெற்றியடைந்திருப்பதாகத் தெரிவித்தார்.
வெற்றிப்படம் கொடுத்த இயக்குநர் ராஜுமுருகனுக்கு டஸ்ட்டர் காரையும் பரிசளித்தார்.
அதுமட்டுமல்ல, குக்கூ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து ராஜுமுருகனுக்கு அடுத்தப்பட வாய்ப்பும் வழங்கி இருப்பதாகத் தெரிவித்தார்.
படம் ஜெயிக்கலைன்னா இதெல்லாம் கொடுப்பாங்களா? அப்படீன்னா.. குக்கூ..ஹிட்டுதான் போலிருக்கிறது!
No comments:
Post a Comment