'வடகறி'யை மறுத்த யுவன்!
'சுப்ரமணியபுரம்' படத்திற்கு பிறகு ஜெய் - சுவாதி இணைந்து நடிக்கும் படம் 'வடகறி'. இப்படத்தை வெங்கட்பிரபுவிடம் உதவி இயக்குநராக இருந்த சரவணராஜ் இயக்குகிறார்.
படத்தினை வெங்கடேஷ்.எஸ் ஒளிப்பதிவு செய்கிறார். மீகா எண்டெர்டெயின்மென்ட் சார்பில் தயாநிதி அழகிரி இப்படத்தைத் தயாரிக்கிறார்.
முதலில் படத்தின் இசையமைப்பாளராக யுவன் ஷங்கர் ராஜா ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார். பாடல்களுக்காக சில டியூன்களையும் கொடுத்திருந்தார்.

இந்நிலையில் அடுத்தடுத்த படங்களில் கவனம் செலுத்தவேண்டும் என இப்படத்திலிருந்து விலகிக்கொண்டார் யுவன் ஷங்கர் ராஜா.
தற்போது, யுவன் ஷங்கர் ராஜாவிற்கு பதிலாக அனிருத்திடம் சவுண்ட் இன்ஜினீயர்களாக இருந்த விவேக் - மெர்வின் இசையமைக்க இருக்கிறார்கள்.
ஏற்கனவே யுவன் கொடுத்த டியூன்களைப் பயன்படுத்திக்கொண்டு மீதி பாடல்களையும், படத்தின் பின்னணி இசையயையும் விவேக் - மெர்வின் பூர்த்தி செய்வார்கள் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.
No comments:
Post a Comment